• Sep 19 2024

சணல் உற்பத்தியில் அந்நிய செலாவணி..! புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்.!samugammedia

Sharmi / May 27th 2023, 10:11 am
image

Advertisement

நாட்டில் சணல் உற்பத்திக்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.

சணல் உற்பத்தியை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவினர், சணல் பயிர்ச் செய்கைக்கான முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் திலும் அமரனுகம தெரிவித்தார்.

திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஊக்குவிப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அதன்படி ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு விரைவில் சோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து சணலை ஏற்றுமதி செய்வதற்காக திட்டத்தை ஆரம்பிக்க சில முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகவும் அது நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கான ஒரு வழியாக அமைய வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


சணல் உற்பத்தியில் அந்நிய செலாவணி. புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்.samugammedia நாட்டில் சணல் உற்பத்திக்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.சணல் உற்பத்தியை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவினர், சணல் பயிர்ச் செய்கைக்கான முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் திலும் அமரனுகம தெரிவித்தார்.திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஊக்குவிப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அதன்படி ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு விரைவில் சோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இருந்து சணலை ஏற்றுமதி செய்வதற்காக திட்டத்தை ஆரம்பிக்க சில முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகவும் அது நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கான ஒரு வழியாக அமைய வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement