• May 17 2024

இராணுவ பஸ் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு..! samugammedia

Chithra / Jun 6th 2023, 11:29 am
image

Advertisement

காலி-கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரின் அடையாளம் இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவ பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அக்குரஸ்ஸ - வெலிகம பிரதான வீதியின் உடுகாவ பகுதியில் நேற்று (05) பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதியதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ பஸ் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு. samugammedia காலி-கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (05) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும், அவரின் அடையாளம் இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் இராணுவ பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, அக்குரஸ்ஸ - வெலிகம பிரதான வீதியின் உடுகாவ பகுதியில் நேற்று (05) பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதியதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement