கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "குஷ்" போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று புதன்கிழமை (24) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இந்தியாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் தாய்லாந்தின் பாங்கொக்கில் "குஷ்" போதைப்பொருட்களை கொள்வனவு செய்து, அங்கிருந்து இன்றையதினம் காலை 12.00 மணிக்கு இண்டிகோ விமானம் 6E-1183 இல் இந்தியாவின் பெங்களூருக்கு வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபரின் பயணப்பையிலிருந்து 03 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்ட 1 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா மதிப்புடைய 01 கிலோகிராம் 556 கிராம் "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட "குஷ்" போதைப்பொருட்களுடன் சந்தேகநபரை மேலதிக விசாரணைக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி கைது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "குஷ்" போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று புதன்கிழமை (24) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் இந்தியாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.அவர் தாய்லாந்தின் பாங்கொக்கில் "குஷ்" போதைப்பொருட்களை கொள்வனவு செய்து, அங்கிருந்து இன்றையதினம் காலை 12.00 மணிக்கு இண்டிகோ விமானம் 6E-1183 இல் இந்தியாவின் பெங்களூருக்கு வந்தடைந்துள்ளார்.சந்தேகநபரின் பயணப்பையிலிருந்து 03 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்ட 1 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா மதிப்புடைய 01 கிலோகிராம் 556 கிராம் "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட "குஷ்" போதைப்பொருட்களுடன் சந்தேகநபரை மேலதிக விசாரணைக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.