• Sep 13 2025

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நியமனம்!

shanuja / Sep 13th 2025, 1:10 pm
image

நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமராகும் வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.


இந்த முடிவு, ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மற்றும் நேபாள இராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையிலான ஒருமித்த கருத்து அமைந்த பின்னர், ஜனாதிபதி மாளிகை மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


புதிய பிரதமரை நியமிப்பதில் ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


கடந்த சில நாட்களாக, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். 


இந்த போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு பல கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்தன.


இந்த சம்பவங்கள் நேபாள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன, மேலும் புதிய பிரதமர் சுஷிலா கார்கியின் தலைமையில் நாட்டின் நிலைமை எவ்வாறு மாறும் என்பதை மக்கள் கவனத்துடன்  நோக்குகின்றார்கள்.

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நியமனம் நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமராகும் வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.இந்த முடிவு, ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மற்றும் நேபாள இராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையிலான ஒருமித்த கருத்து அமைந்த பின்னர், ஜனாதிபதி மாளிகை மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிய பிரதமரை நியமிப்பதில் ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு பல கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்தன.இந்த சம்பவங்கள் நேபாள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன, மேலும் புதிய பிரதமர் சுஷிலா கார்கியின் தலைமையில் நாட்டின் நிலைமை எவ்வாறு மாறும் என்பதை மக்கள் கவனத்துடன்  நோக்குகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement