• Jan 24 2025

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு பிணை!

Chithra / Jan 23rd 2025, 3:14 pm
image

 

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு பிங்கிரிய, நாரம்மல பகுதிகளில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 61 லட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபாய் நிதியைப் பெற்று, அந்த நிதியை அதற்காகப் பயன்படுத்தாமல், அதை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக இவர்கள்   மீது குற்றச்சாட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு பிணை  குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.2014 ஆம் ஆண்டு பிங்கிரிய, நாரம்மல பகுதிகளில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 61 லட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபாய் நிதியைப் பெற்று, அந்த நிதியை அதற்காகப் பயன்படுத்தாமல், அதை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக இவர்கள்   மீது குற்றச்சாட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement