பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில், நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றியமைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்,
பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் பொருத்தமானதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பாடங்களை ஒருபோதும் நீக்கும் எண்ணம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கல்வி முறை மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லப்படும் நேரத்தில், மூன்று துறைகளில் அவ்வாறு செய்ய விரும்புவதாகக் கூறிய பிரதமர், ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி பணியாற்றுவேன் என்றும் கூறினார்.
இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
வெகு விரைவில் பெறுபேறுகளை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பிரதமர் தெரிவித்தார்.
2026 முதல் இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் - சபையில் அறிவித்த பிரதமர் பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில், நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.தற்போதுள்ள கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றியமைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.அதன்படி, கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் பொருத்தமானதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பாடங்களை ஒருபோதும் நீக்கும் எண்ணம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.மேலும், கல்வி முறை மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லப்படும் நேரத்தில், மூன்று துறைகளில் அவ்வாறு செய்ய விரும்புவதாகக் கூறிய பிரதமர், ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி பணியாற்றுவேன் என்றும் கூறினார்.இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.வெகு விரைவில் பெறுபேறுகளை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பிரதமர் தெரிவித்தார்.