• Sep 19 2024

கடையடைப்பு போராட்டத்திற்கு முஸ்லிம் மக்களையும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் எம்.பி.கோரிக்கை...!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 11:08 pm
image

Advertisement

வடகிழக்கில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி க.ரஞ்சினி ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கும் கடையடைப்பு போராட்டத்திற்கு வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியும் போக்குவரத்து சேவையிலீடுபவர்கள் போக்குவரத்துச் சேவையினை நிறுத்தியும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வடகிழக்கின் பல்வேறு இடங்களிலும் இன்று காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.கொடிய பயங்கரவாத இந்த புதிய சட்டமானது மிகவும் கொரூரமானது என்பதை இலங்கையிலிருக்கின்ற எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும்,புத்திஜீவிகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்த சட்ட மூலத்தின் மூலம் வடகிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களே அதிகளவில் பாதிக்கப்படபோகின்றோம்.அந்த பயங்காத எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதன் காரணமாகவே அன்றைய நாளை ஒரு பொது எதிர்ப்பாக காட்டவேண்டும் என்பதற்காக வடகிழக்கில் ஏழு கட்சிகளுடன் இணைந்து பல்வேறுபட்ட பொது அமைப்புகளும் இணைந்து இந்த பொது கதவடைப்பினை 25ஆம் திகதி பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ் வர்த்தகர்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய வர்த்தகர்களும் இந்தபோராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.அதனைவிட ஒரு கொடிய சட்டம் வருகின்றபோது அதற்கான எதிர்ப்பினை நாங்கள் காட்டாமல் விடுவோமானால் அதனை அங்கீகரிக்கின்றோமா என்ற கேள்வியெழுகின்றது என தெரிவித்தார்.

கடையடைப்பு போராட்டத்திற்கு முஸ்லிம் மக்களையும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் எம்.பி.கோரிக்கை.samugammedia வடகிழக்கில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி க.ரஞ்சினி ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கும் கடையடைப்பு போராட்டத்திற்கு வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியும் போக்குவரத்து சேவையிலீடுபவர்கள் போக்குவரத்துச் சேவையினை நிறுத்தியும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வடகிழக்கின் பல்வேறு இடங்களிலும் இன்று காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.கொடிய பயங்கரவாத இந்த புதிய சட்டமானது மிகவும் கொரூரமானது என்பதை இலங்கையிலிருக்கின்ற எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும்,புத்திஜீவிகளும் தெரிவித்துவருகின்றனர்.இந்த சட்ட மூலத்தின் மூலம் வடகிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களே அதிகளவில் பாதிக்கப்படபோகின்றோம்.அந்த பயங்காத எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதன் காரணமாகவே அன்றைய நாளை ஒரு பொது எதிர்ப்பாக காட்டவேண்டும் என்பதற்காக வடகிழக்கில் ஏழு கட்சிகளுடன் இணைந்து பல்வேறுபட்ட பொது அமைப்புகளும் இணைந்து இந்த பொது கதவடைப்பினை 25ஆம் திகதி பிரகடனப்படுத்தியுள்ளனர்.இந்த போராட்டத்திற்கு தமிழ் வர்த்தகர்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய வர்த்தகர்களும் இந்தபோராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.அதனைவிட ஒரு கொடிய சட்டம் வருகின்றபோது அதற்கான எதிர்ப்பினை நாங்கள் காட்டாமல் விடுவோமானால் அதனை அங்கீகரிக்கின்றோமா என்ற கேள்வியெழுகின்றது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement