இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக இஞ்சி மூடைகளை கடத்திச் செல்வதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை 5.30 மணியளவில் கற்பிட்டி பொலிஸாருடன் இனைந்து பள்ளிவாசல்துறைப் பகுதியில் இஞ்சி மூடைகளை கடத்திச் செல்ல உளவு பார்த்துச் சென்ற மோட்டார் சைக்கிளை மறைத்து கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது லொறியில் கடத்தி வருவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து கற்பிட்டி சம்மட்டிவாடி கடற்கரைப் பகுதியிலிருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்ல முற்பட்டபோது கண்டக்குடா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக குறித்த லொறியினை மறித்து சோதனையில் ஈடுப்பட்டபோது இஞ்சி மூடைகள் இருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது 45 உரைகள் அடங்கிய 1839 கிலோகொராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு புத்தளம் மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இஞ்சி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியையும் உளவு பார்கச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட இஞ்சி மூடைகள் 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் கைப்பற்றிய இஞ்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட - 90 இலட்சம் ரூபா பெறுமதியுடைய இஞ்சி மூடைகளுடன் நால்வர் கைது இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக இஞ்சி மூடைகளை கடத்திச் செல்வதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை 5.30 மணியளவில் கற்பிட்டி பொலிஸாருடன் இனைந்து பள்ளிவாசல்துறைப் பகுதியில் இஞ்சி மூடைகளை கடத்திச் செல்ல உளவு பார்த்துச் சென்ற மோட்டார் சைக்கிளை மறைத்து கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது லொறியில் கடத்தி வருவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து கற்பிட்டி சம்மட்டிவாடி கடற்கரைப் பகுதியிலிருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்ல முற்பட்டபோது கண்டக்குடா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக குறித்த லொறியினை மறித்து சோதனையில் ஈடுப்பட்டபோது இஞ்சி மூடைகள் இருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதன்போது 45 உரைகள் அடங்கிய 1839 கிலோகொராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு புத்தளம் மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இஞ்சி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியையும் உளவு பார்கச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைப்பற்றப்பட்ட இஞ்சி மூடைகள் 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் கைப்பற்றிய இஞ்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.