இந்தியாவின் மும்பையின் குர்லாவில் நேற்று (09) இரவு பஸ் ஒன்று பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது .
இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும்இ 32 பேர் காயமடைந்ததாகவும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (09) இரவு பிரஹன்மும்பை மின்சாரம் வழங்கல் மற்றும் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பல வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது, குறித்த பஸ் குர்லாவிலிருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்ததாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பாதையில் சென்ற மக்கள் தாக்கப்பட்டதால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் சுவரில் மோதி பஸ் நின்றது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை, தடயவியல் குழு விபத்து நடந்த இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டது.
விபத்துக்குப் பின்னர், உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள பாபா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், சிறிது நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட அவசர சேவைகள் அங்கு வந்தன.
விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், சிலர் இன்னும் வைத்தியசாலை, பிற மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையில் பாதசாரிகள் மீது பஸ் மோதி விபத்து - நால்வர் உயிரிழப்பு இந்தியாவின் மும்பையின் குர்லாவில் நேற்று (09) இரவு பஸ் ஒன்று பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது . இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும்இ 32 பேர் காயமடைந்ததாகவும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (09) இரவு பிரஹன்மும்பை மின்சாரம் வழங்கல் மற்றும் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பல வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் நடந்தபோது, குறித்த பஸ் குர்லாவிலிருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்ததாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.அதன் பாதையில் சென்ற மக்கள் தாக்கப்பட்டதால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியில் சுவரில் மோதி பஸ் நின்றது.இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை, தடயவியல் குழு விபத்து நடந்த இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டது.விபத்துக்குப் பின்னர், உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள பாபா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். மேலும், சிறிது நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட அவசர சேவைகள் அங்கு வந்தன.விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், சிலர் இன்னும் வைத்தியசாலை, பிற மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.