பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு உதவ குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு பொலிஸ் புலனாய்வுக் குழுவை நியமிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் சமீபத்தில் அறிவித்தது.
சம்பந்தப்பட்ட குழு 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாகக் கூடியபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் குழுவிற்கு உதவ சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோரை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தேசபந்து விசாரணைக் குழுவில் மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் சேர்ப்பு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு உதவ குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு பொலிஸ் புலனாய்வுக் குழுவை நியமிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் சமீபத்தில் அறிவித்தது.சம்பந்தப்பட்ட குழு 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாகக் கூடியபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.விசாரணைக் குழுவிற்கு உதவ சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோரை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.