நான்கு இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பின் சரத்து 47(3)(a) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம். நான்கு இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.இலங்கை அரசியலமைப்பின் சரத்து 47(3)(a) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.