• Sep 20 2024

விவசாயிகளுக்கு இலவச உரம் - விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 21st 2023, 12:11 pm
image

Advertisement

ட்ரிப்பல் பொசுப்பைற்று உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

36 ஆயிரம் மெட்றிக் டொன் ட்ரிப்பல் பொசுப்பைற்று அடங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதியுதவியின் கீழ் இந்த உரம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

பெற்றுக்கொள்ளப்படவுள்ள இந்த உரத்தினை சிறு போகத்தில் நெல் பயிரிடவுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


பெப்பிரவரி மாத இறுதியில் பெரும்போகம் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் 3 ஆயிரத்து 500 மெட்றிக்டொன் பொசுப்பைற்று உரத்தினை பணத்திற்கு கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச உரம் - விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia ட்ரிப்பல் பொசுப்பைற்று உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.36 ஆயிரம் மெட்றிக் டொன் ட்ரிப்பல் பொசுப்பைற்று அடங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதியுதவியின் கீழ் இந்த உரம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.பெற்றுக்கொள்ளப்படவுள்ள இந்த உரத்தினை சிறு போகத்தில் நெல் பயிரிடவுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பெப்பிரவரி மாத இறுதியில் பெரும்போகம் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் 3 ஆயிரத்து 500 மெட்றிக்டொன் பொசுப்பைற்று உரத்தினை பணத்திற்கு கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement