• Oct 18 2024

போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியம்! அமைச்சர் பந்துல samugammedia

Chithra / Jul 25th 2023, 2:47 pm
image

Advertisement

போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க, போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என்பதை உலகின் ஏனைய நாடுகளை போல, இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் நாம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இதனால் செய்துக்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இப்போது செய்துக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்வரும் காலங்களி;ல செயற்படுத்தவும் நாம் தற்போது கலந்துரையாடல்களை நடத்திவருகிறோம்.

அந்தவகையில், விரைவிலேயே இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியம் அமைச்சர் பந்துல samugammedia போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க, போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என்பதை உலகின் ஏனைய நாடுகளை போல, இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் நாம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இதனால் செய்துக்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம்.மேலும், இப்போது செய்துக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்வரும் காலங்களி;ல செயற்படுத்தவும் நாம் தற்போது கலந்துரையாடல்களை நடத்திவருகிறோம்.அந்தவகையில், விரைவிலேயே இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement