• Jun 30 2024

யாழில் மிக்சருக்குள் பொரித்த பல்லி; கடுமையான எச்சரிக்கையுடன் 15 ஆயிரம் ரூபாய் தண்டம்

Chithra / Jun 28th 2024, 1:21 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் - செல்வசந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, 

பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, 

மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

யாழில் மிக்சருக்குள் பொரித்த பல்லி; கடுமையான எச்சரிக்கையுடன் 15 ஆயிரம் ரூபாய் தண்டம்  யாழ்ப்பாணம் - செல்வசந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

Advertisement

Advertisement

Advertisement