களுத்துறை, பண்டாரகம, ஹந்துன்வென்ன பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், தங்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி பழ வியாபாரி ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
லுணுகம்வெஹர பிரதேசத்தில் வசிக்கும் பழ வியாபாரி ஒருவர் பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள கடைகளுக்கு வாழைப்பழங்களை விற்பனை செய்யவதற்காக நேற்று காலை தனது லொறியில் சென்றுள்ளார்.
பின்னர், இந்த பழ வியாபாரி மாலை நேரத்தில் பண்டாரகம பிரதேசத்திற்கு சென்று ஹந்துன்வன்ன பிரதேசத்தில் உள்ள பழ கடை ஒன்றிற்கு முன்பாக லொறியை நிறுத்திவிட்டு, அந்த கடைக்கு வாழைப்பழங்களை விற்பனை செய்து,
மீண்டும் லொறியில் ஏற முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் பழ வியாபாரியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 150,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பழ வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - துப்பாக்கி முனையில் நடந்த சம்பவம் களுத்துறை, பண்டாரகம, ஹந்துன்வென்ன பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், தங்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி பழ வியாபாரி ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, லுணுகம்வெஹர பிரதேசத்தில் வசிக்கும் பழ வியாபாரி ஒருவர் பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள கடைகளுக்கு வாழைப்பழங்களை விற்பனை செய்யவதற்காக நேற்று காலை தனது லொறியில் சென்றுள்ளார்.பின்னர், இந்த பழ வியாபாரி மாலை நேரத்தில் பண்டாரகம பிரதேசத்திற்கு சென்று ஹந்துன்வன்ன பிரதேசத்தில் உள்ள பழ கடை ஒன்றிற்கு முன்பாக லொறியை நிறுத்திவிட்டு, அந்த கடைக்கு வாழைப்பழங்களை விற்பனை செய்து, மீண்டும் லொறியில் ஏற முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் பழ வியாபாரியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 150,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.