• Jan 07 2025

பிரபல திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் : ஏ.ஏ.ஜுனைதீன் காலமானார்

Tharmini / Jan 6th 2025, 11:43 am
image

இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் “ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார்.

இலங்கை திரைப்பட வரலாற்றில் தமிழ், சிங்கள திரைப்படங்கள் பலவற்றைத் தயாரித்த கலைஞர், எழுத்தாளர், இயக்குநர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் எனப் பல்துறைகளில் மிளிர்ந்த பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் தனது 76 ஆவது வயதில் வத்தளை, ஹுணுப்பிட்டியில் நேற்று (05) காலமானார்.

ஏ.ஏ.ஜுனைதீன், மேடை நாடகங்கள், தமிழ், சிங்கள திரைப்படங்கள் பலவற்றுக்கும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளதோடு சில படங்களை இயக்கியும், தயாரித்துமுள்ளார். தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக கடமையாற்றிய பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன், ஷார்மிளாவின் இதய ராகம் என்ற நாவலை தொடர் கதையாக சிந்தாமணி பத்திரிகையில் பிரசுரித்து அதனை முதவாவது வர்ணத் தமிழ்த் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டார்.

‘சொமி போய்ஸ்’, ‘குருமிட்டெக் எவில்லா’, ‘கொட்டவுட’ ‘எக்ஸ்பிரஸ்’, ‘மமய் பியே ஆதரே’ ஆகிய சிங்களத் திரைப்படங்களில் சில திரைப்படங்களை இயக்கி, தயாரித்து, திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் : ஏ.ஏ.ஜுனைதீன் காலமானார் இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் “ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார்.இலங்கை திரைப்பட வரலாற்றில் தமிழ், சிங்கள திரைப்படங்கள் பலவற்றைத் தயாரித்த கலைஞர், எழுத்தாளர், இயக்குநர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் எனப் பல்துறைகளில் மிளிர்ந்த பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் தனது 76 ஆவது வயதில் வத்தளை, ஹுணுப்பிட்டியில் நேற்று (05) காலமானார்.ஏ.ஏ.ஜுனைதீன், மேடை நாடகங்கள், தமிழ், சிங்கள திரைப்படங்கள் பலவற்றுக்கும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளதோடு சில படங்களை இயக்கியும், தயாரித்துமுள்ளார். தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக கடமையாற்றிய பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன், ஷார்மிளாவின் இதய ராகம் என்ற நாவலை தொடர் கதையாக சிந்தாமணி பத்திரிகையில் பிரசுரித்து அதனை முதவாவது வர்ணத் தமிழ்த் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டார்.‘சொமி போய்ஸ்’, ‘குருமிட்டெக் எவில்லா’, ‘கொட்டவுட’ ‘எக்ஸ்பிரஸ்’, ‘மமய் பியே ஆதரே’ ஆகிய சிங்களத் திரைப்படங்களில் சில திரைப்படங்களை இயக்கி, தயாரித்து, திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement