• Jan 07 2025

சிறைச்சாலை அதிகாரி பதவிகளுக்கு வெற்றிடம்; கைதிகளை சோதனையிடும் நடவடிக்கை பாதிப்பு

Chithra / Jan 6th 2025, 11:41 am
image

 

சிறைச்சாலை அதிகாரி பதவிகளுக்கு 1,800 வெற்றிடம் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கைதிகளை சோதனையிடும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கைதிகளை சோதனையிடும் பணிகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


சிறைச்சாலை அதிகாரி பதவிகளுக்கு வெற்றிடம்; கைதிகளை சோதனையிடும் நடவடிக்கை பாதிப்பு  சிறைச்சாலை அதிகாரி பதவிகளுக்கு 1,800 வெற்றிடம் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கைதிகளை சோதனையிடும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், கைதிகளை சோதனையிடும் பணிகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement