• May 02 2025

எரிபொருள் விலையில் இன்று முதல் மாற்றம்..? வெளியான வர்த்தமானி

Chithra / Mar 4th 2024, 8:05 am
image

 

எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

எரிபொருள் விலையில் இன்று முதல் மாற்றம். வெளியான வர்த்தமானி  எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதேவேளை, மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இதன் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement

Buy Now