இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.
பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.
எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.