"மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்" என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்த தற்போதைய நிலைவரம் பற்றி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"2017 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு உரிய காலத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தால் மாகாண சபைத் தேர்தலை அன்றே நடத்தியிருக்கலாம்.
குறித்த குழு அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துச் சட்டத்தில் தெளிவான ஏற்பாடுகள் இல்லை. இதுவே தற்போதைய இழுபறிக்கு முக்கிய காரணமாகும்.
இந்தச் சட்டச் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெகுவிரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் முறையான தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் சிறந்த முறையில் தேர்தலை நடத்த முடியும். தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான சூழலை உருவாக்கத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கின்றது." - என்றார்.
மாகாணத் தேர்தலை நடத்த அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஆதரவு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு "மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்" என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தல் குறித்த தற்போதைய நிலைவரம் பற்றி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்."2017 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு உரிய காலத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தால் மாகாண சபைத் தேர்தலை அன்றே நடத்தியிருக்கலாம்.குறித்த குழு அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துச் சட்டத்தில் தெளிவான ஏற்பாடுகள் இல்லை. இதுவே தற்போதைய இழுபறிக்கு முக்கிய காரணமாகும்.இந்தச் சட்டச் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெகுவிரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் முறையான தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் சிறந்த முறையில் தேர்தலை நடத்த முடியும். தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான சூழலை உருவாக்கத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கின்றது." - என்றார்.