• May 03 2024

பொது வேட்பாளரை தெரிவு செய்ய கஜேந்திரகுமாரும் கைகோர்க்க வேண்டும் - ஆனால் அவர் யாரையோ வெல்ல வைக்க எத்தனிக்கிறார் - சித்தார்த்தன் எம்பி தெரிவிப்பு

Tharun / Apr 14th 2024, 7:13 pm
image

Advertisement

இலங்கையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்ப்பாளரினை தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். 

இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் தரப்பில் இருக்க கூடிய காட்சிகள் ஆகக்கூடிய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை போடவேண்டும் என்ற நிலைப்பாடு ஆரம்பத்திலே நாங்களும் எடுத்த ஒரு நிலைப்பாடுதான் இன்றுவரை அதனை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் கொள்கை ரீதியாக அதிலே இருக்கின்ற 5 கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருக்க கூடிய ஒன்று நிச்சயமாக தமிழரசுக்கட்சியும் அதில் சேர வேண்டும். 

இன்று அவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் கட்சி பிளவு பட்டது போல தெரிந்தாலும் முக்கியமான கட்சியாக தமிழ்  தேசிய கட்சியில் உள்ளவர்கள் பார்க்கப்பட வேண்டும். ஆகவே அவர்களும்  இதிலே சேரவேண்டும் என்பது  நான் ஆரம்ப காலம் தொடக்கம் சொல்லி வருகின்றேன்.  

அதே போல விக்கினேஸ்வரனின் கட்சியும் இதிலே சேருவது நல்லது. மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினுடைய தமிழ் காங்கிரஸும் இதிலே இணைந்து கொண்டால் நல்லது. அவர் நிச்சயமாக இணைவதற்கு தயாராகவில்லை. நிச்சயமாக இதை ஒரு நாடகம் என்ற ரீதியிலே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் யாரையோ வெல்லப் பண்ணுவதற்காக நாங்கள் எடுக்கின்ற முயற்சி என்று. 

பகிஸ்கரிப்பு என்பதுவும் யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி என்று நான் பார்ர்கின்றேன். பகிஸ்கரிப்பதன் மூலம் யாரோ ஒருவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் இது கடந்த காலங்களில் கூட பகிஸ்கரிப்பின் மூலம் ஒருவரை தோற்கடித்து வெல்லுவதற்காகத்தான் 2005 இலே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதனால் ரணில்  தோற்கடிக்கப்பட்டு அந்த நேரத்தில் மகிந்தவை வெல்ல வைப்பதன் மூலம் அவர் சர்வதேச செல்வாக்கு அற்றவர். அவரை வெல்ல வைப்பது நல்லது  என்ற அபிப்பிராயம் அங்கு  இருந்தது என்ற காரணத்தினாலே வெல்ல வைக்கின்ற முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதனை கொள்கை றீதியாக செயல் படுத்தியிருக்கிறார்கள். அதே போலத்தான் இன்றும் பகிஸ்கரிப்பதன் மூலம் யாரை வெல்ல முயற்சிக்கின்றார்கள் என்பதை அவர்கள் இன்னும் கூறவில்லை. ஆனால்  எங்களை பொறுத்தமட்டில் இது ஒரு கொள்கை ரீதியாக கடந்த காலங்களிலே எதோ ஒரு வகையிலே ஒரு  கட்சிக்கு நாங்கள் சார்பாக இருந்த போதும் அந்த கட்சியால் முழுமையாக  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேதான் அனைவருமாக சேர்ந்து இந்த  எடுக்க வேண்டும். ஒரு பொது வேட்பாளரை போடுகின்ற பொழுது அந்த வேட்ப்பாளர் ஆகக்கூடிய தமிழ் மக்களினுடைய வாக்குகளை பெற வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளரை தெரிவு செய்ய கஜேந்திரகுமாரும் கைகோர்க்க வேண்டும் - ஆனால் அவர் யாரையோ வெல்ல வைக்க எத்தனிக்கிறார் - சித்தார்த்தன் எம்பி தெரிவிப்பு இலங்கையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்ப்பாளரினை தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் தரப்பில் இருக்க கூடிய காட்சிகள் ஆகக்கூடிய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை போடவேண்டும் என்ற நிலைப்பாடு ஆரம்பத்திலே நாங்களும் எடுத்த ஒரு நிலைப்பாடுதான் இன்றுவரை அதனை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் கொள்கை ரீதியாக அதிலே இருக்கின்ற 5 கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருக்க கூடிய ஒன்று நிச்சயமாக தமிழரசுக்கட்சியும் அதில் சேர வேண்டும். இன்று அவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் கட்சி பிளவு பட்டது போல தெரிந்தாலும் முக்கியமான கட்சியாக தமிழ்  தேசிய கட்சியில் உள்ளவர்கள் பார்க்கப்பட வேண்டும். ஆகவே அவர்களும்  இதிலே சேரவேண்டும் என்பது  நான் ஆரம்ப காலம் தொடக்கம் சொல்லி வருகின்றேன்.  அதே போல விக்கினேஸ்வரனின் கட்சியும் இதிலே சேருவது நல்லது. மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினுடைய தமிழ் காங்கிரஸும் இதிலே இணைந்து கொண்டால் நல்லது. அவர் நிச்சயமாக இணைவதற்கு தயாராகவில்லை. நிச்சயமாக இதை ஒரு நாடகம் என்ற ரீதியிலே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் யாரையோ வெல்லப் பண்ணுவதற்காக நாங்கள் எடுக்கின்ற முயற்சி என்று. பகிஸ்கரிப்பு என்பதுவும் யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி என்று நான் பார்ர்கின்றேன். பகிஸ்கரிப்பதன் மூலம் யாரோ ஒருவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் இது கடந்த காலங்களில் கூட பகிஸ்கரிப்பின் மூலம் ஒருவரை தோற்கடித்து வெல்லுவதற்காகத்தான் 2005 இலே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதனால் ரணில்  தோற்கடிக்கப்பட்டு அந்த நேரத்தில் மகிந்தவை வெல்ல வைப்பதன் மூலம் அவர் சர்வதேச செல்வாக்கு அற்றவர். அவரை வெல்ல வைப்பது நல்லது  என்ற அபிப்பிராயம் அங்கு  இருந்தது என்ற காரணத்தினாலே வெல்ல வைக்கின்ற முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதனை கொள்கை றீதியாக செயல் படுத்தியிருக்கிறார்கள். அதே போலத்தான் இன்றும் பகிஸ்கரிப்பதன் மூலம் யாரை வெல்ல முயற்சிக்கின்றார்கள் என்பதை அவர்கள் இன்னும் கூறவில்லை. ஆனால்  எங்களை பொறுத்தமட்டில் இது ஒரு கொள்கை ரீதியாக கடந்த காலங்களிலே எதோ ஒரு வகையிலே ஒரு  கட்சிக்கு நாங்கள் சார்பாக இருந்த போதும் அந்த கட்சியால் முழுமையாக  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேதான் அனைவருமாக சேர்ந்து இந்த  எடுக்க வேண்டும். ஒரு பொது வேட்பாளரை போடுகின்ற பொழுது அந்த வேட்ப்பாளர் ஆகக்கூடிய தமிழ் மக்களினுடைய வாக்குகளை பெற வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement