• May 04 2024

சிட்னியில் நடந்த பயங்கர சம்பவம் தொடர்பில் தவறாக அடையாளம் காட்டப்பட்ட மாணவர்!

Tharun / Apr 14th 2024, 7:17 pm
image

Advertisement

சிட்னியில் நேற்று(13) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு பதிலாக பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் புகைப்படம் இணையங்களில் வெளியாகியுள்ளது.

முன்னதாக தாக்குதல் நடத்தியவர்  சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவர் 40 வயதான குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜோயல் காச்சி என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் இணையத்தளங்களில் 20 வயதான மாணவர் பென் கோஹனின் புகைப்படத்தை பதிவிட்டு அவரே தாக்குல்தாரி என்று அடையாளப்படுத்தப்பட்டது 

இதன் காரணமாக தாக்குதல்தாரி "பெஞ்சமின் கோஹன்" என்ற பெயர் எக்ஸ் பக்கங்களில் பிரபலமடைந்தது. கோஹன் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர். அவர் கிழக்கு புறநகர்ப் பகுதியில் தனது பெற்றோருடன் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கோஹனின் தந்தையான மார்க், தமது மகன் தொடர்பில் தவறான அடையாளத்தால் பதற்றமடைந்து காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார்.

எனினும் தாக்குதல்தாரியும் குறித்த மாணவரும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருந்தமையால் இந்த தவறு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்

சிட்னியில் நடந்த பயங்கர சம்பவம் தொடர்பில் தவறாக அடையாளம் காட்டப்பட்ட மாணவர் சிட்னியில் நேற்று(13) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு பதிலாக பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் புகைப்படம் இணையங்களில் வெளியாகியுள்ளது.முன்னதாக தாக்குதல் நடத்தியவர்  சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவர் 40 வயதான குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜோயல் காச்சி என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் இணையத்தளங்களில் 20 வயதான மாணவர் பென் கோஹனின் புகைப்படத்தை பதிவிட்டு அவரே தாக்குல்தாரி என்று அடையாளப்படுத்தப்பட்டது இதன் காரணமாக தாக்குதல்தாரி "பெஞ்சமின் கோஹன்" என்ற பெயர் எக்ஸ் பக்கங்களில் பிரபலமடைந்தது. கோஹன் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர். அவர் கிழக்கு புறநகர்ப் பகுதியில் தனது பெற்றோருடன் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் கோஹனின் தந்தையான மார்க், தமது மகன் தொடர்பில் தவறான அடையாளத்தால் பதற்றமடைந்து காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார்.எனினும் தாக்குதல்தாரியும் குறித்த மாணவரும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருந்தமையால் இந்த தவறு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement