• May 18 2024

கோட் படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் ... விஜய்க்கு வில்லன் இவர் தானா?

Aathira / May 4th 2024, 3:54 pm
image

Advertisement

இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தான் கோட். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி,  மைக் மோகன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கோட் படத்தில் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரன் தற்போது நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யுகேந்திரன் இறுதியாக விஜய் டிவியில் இடம் பெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஆனாலும் இவர் பாதியிலேயே எலிமினேஷன் ஆகி இருந்தார்.

இவ்வாறு தற்போது கோட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யுகேந்திரன் நடிக்க இருப்பதாகவும் இந்த காட்சிகள் ரஷ்யாவில் ஷூட் செய்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கோட் படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் . விஜய்க்கு வில்லன் இவர் தானா இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தான் கோட். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கின்றார்.இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி,  மைக் மோகன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.இந்த நிலையில், கோட் படத்தில் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரன் தற்போது நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் யுகேந்திரன் இறுதியாக விஜய் டிவியில் இடம் பெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஆனாலும் இவர் பாதியிலேயே எலிமினேஷன் ஆகி இருந்தார்.இவ்வாறு தற்போது கோட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யுகேந்திரன் நடிக்க இருப்பதாகவும் இந்த காட்சிகள் ரஷ்யாவில் ஷூட் செய்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement