• Feb 26 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை துப்பாகிதாரிக்கு உதவிய பெண் உட்பட இருவர் கைது

Thansita / Feb 25th 2025, 9:45 am
image

புதுக்கடை  நீதிமன்றத்திற்குள் கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ  சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  8 பேர் கைது செய்யப்ட்ட நிலையில் நேற்றையதினம் பெண் உட்பட இருவர் கைது கைது செய்யப்ட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

 நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டள்ளனர்

 கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இக்கைது இடம்பெற்றுள்ளது. 

சந்தேக நபர்களான  இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை  கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கணேமுல்ல சஞ்சீவ கொலை துப்பாகிதாரிக்கு உதவிய பெண் உட்பட இருவர் கைது புதுக்கடை  நீதிமன்றத்திற்குள் கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ  சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  8 பேர் கைது செய்யப்ட்ட நிலையில் நேற்றையதினம் பெண் உட்பட இருவர் கைது கைது செய்யப்ட்டுள்ளனர்.கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அதன்படி, கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டனர். நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டள்ளனர் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இக்கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களான  இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது.இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை  கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement