• Feb 22 2025

கணேமுல்ல சுட்டுக்கொலை; துப்பாக்கிதாரி அடையாளம்! விரைவில் பலர் கைது செய்யப்படுவர் அமைச்சர் சுனில் அறிவிப்பு

Chithra / Feb 19th 2025, 1:35 pm
image



புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த பிரதி அமைச்சர், அங்கு இருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். என்று குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கணேமுல்ல சுட்டுக்கொலை; துப்பாக்கிதாரி அடையாளம் விரைவில் பலர் கைது செய்யப்படுவர் அமைச்சர் சுனில் அறிவிப்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த பிரதி அமைச்சர், அங்கு இருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். என்று குறிப்பிட்டார். எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement