• Feb 21 2025

ஜே.பியினர் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தபோது கவலைப்பட்டார்களா? அநுரவை சாடிய கபீர் ஹாசிம் எம்.பி

Chithra / Feb 19th 2025, 1:43 pm
image

 யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்  தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார்.

யாழ்ப்பாண நூலகத்திற்கு தமிழ் மக்கள் எவ்வளவோ மரியாதை செலுத்தினார்கள், மாணவர்கள் அதற்குள் நுழையும் போது பாதணிகளை கழற்றி விட்டு தான் செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்றும் எமது தாய்க்கட்சி அதற்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியினால் அந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.

எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார்.

நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். 

ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.

அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா, அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.

யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி, நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா. என தெரிவித்தார்.

ஜே.பியினர் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தபோது கவலைப்பட்டார்களா அநுரவை சாடிய கபீர் ஹாசிம் எம்.பி  யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்  தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார்.யாழ்ப்பாண நூலகத்திற்கு தமிழ் மக்கள் எவ்வளவோ மரியாதை செலுத்தினார்கள், மாணவர்கள் அதற்குள் நுழையும் போது பாதணிகளை கழற்றி விட்டு தான் செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்றும் எமது தாய்க்கட்சி அதற்கு குற்றஞ்சாட்டப்பட்டது.எனவே ஐக்கிய தேசியக் கட்சியினால் அந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார்.நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா, அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி, நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா. என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement