• Apr 07 2025

அம்பாறையில் குவியும் கணையான் மீன் இனங்கள்...! மீனவர்கள் மகிழ்ச்சி...!samugammedia

Sharmi / Feb 1st 2024, 11:58 am
image

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான  கணையான்  மீன் இனங்கள்   அம்பாறை மாவட்டத்தின்   பிராந்திய  ஆற்றோரங்களில்  பிடிபடுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து   3 வகையான கணையான் வகை  மீன்கள்  கரை வலைகள் கட்டு வலைகள் தூண்டில்கள்   மூலம் பிடிக்கப்பட்டு ஆயிரம் ரூபா  வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சுமார் 5 முதல் 25 கிலோ  எடையுள்ள பாரிய  கணையான்  மீன் இனங்களே இவ்வாறு மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.

இவ்வகையான மீன்கள் 1000  ரூபா முதல் 9 ஆயிரம்  ரூபா வரை விற்பனையாகி வருவதுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இதே வேளை  மீனவர்கள் பிடிக்கப்படும் கணையான் மீன்களை பால் கணையாள், செங்கணையான், முள்கணையான் என வகைப்படுத்தி விற்பனை செய்து வருவதும்  குறிப்பிடத்தக்கது.


அம்பாறையில் குவியும் கணையான் மீன் இனங்கள். மீனவர்கள் மகிழ்ச்சி.samugammedia திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான  கணையான்  மீன் இனங்கள்   அம்பாறை மாவட்டத்தின்   பிராந்திய  ஆற்றோரங்களில்  பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து   3 வகையான கணையான் வகை  மீன்கள்  கரை வலைகள் கட்டு வலைகள் தூண்டில்கள்   மூலம் பிடிக்கப்பட்டு ஆயிரம் ரூபா  வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.சுமார் 5 முதல் 25 கிலோ  எடையுள்ள பாரிய  கணையான்  மீன் இனங்களே இவ்வாறு மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.இவ்வகையான மீன்கள் 1000  ரூபா முதல் 9 ஆயிரம்  ரூபா வரை விற்பனையாகி வருவதுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை  மீனவர்கள் பிடிக்கப்படும் கணையான் மீன்களை பால் கணையாள், செங்கணையான், முள்கணையான் என வகைப்படுத்தி விற்பனை செய்து வருவதும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now