• Jan 01 2025

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Tamil nila / Dec 21st 2024, 10:52 pm
image

அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின்படி, விசேட வைத்தியர்கள், தரப்படுத்தப்பட்ட வைத்திய மற்றும் பல் வைத்திய அதிகாரிகள், அனைத்து வைத்திய நிர்வாக அதிகாரிகள், விசேட பல் வைத்தியர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வைத்திய நிபுணர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும்.

அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின்படி, விசேட வைத்தியர்கள், தரப்படுத்தப்பட்ட வைத்திய மற்றும் பல் வைத்திய அதிகாரிகள், அனைத்து வைத்திய நிர்வாக அதிகாரிகள், விசேட பல் வைத்தியர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வைத்திய நிபுணர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும்.அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement