ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைப்பது தொடர்பில் நாளை (01) கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்பிற்கு சி.வி.விக்னேஸ்வரன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் பொது வேட்பாளர் தொடர்பான பிரேரணையை திசை திருப்பவே இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பல இடங்களில் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைப்பது தொடர்பில் நாளை (01) கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்பிற்கு சி.வி.விக்னேஸ்வரன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் பொது வேட்பாளர் தொடர்பான பிரேரணையை திசை திருப்பவே இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.இதற்கு முன்னர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பல இடங்களில் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது