• Jun 30 2024

தேர்தலுக்குத் தயாராகுங்கள்...! தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Chithra / Jun 28th 2024, 11:53 am
image

Advertisement

 

தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் அல்லது ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. 

இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க அறிவித்தார்.

அவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தலுக்குத் தயாராகுங்கள். தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு  தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் அல்லது ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க அறிவித்தார்.அவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement