• Oct 06 2024

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி: சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை..! samugammedia

Chithra / Dec 1st 2023, 2:25 pm
image

Advertisement

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08 இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 

குறித்த மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் எனவும், சில சிக்கல் நிலைகள் காரணமாக வீட்டில் இருந்து சுயகற்றல் மூலம் மாணவி பரீட்சைக்குத் தோற்றியதாக மாணவியின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த மாணவி சதுரங்க போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும், 

ஆறு நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல துறைகளில் தான் தடம் பதிக்க வேண்டும் எனவும்,  முடியுமென்றால் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்திற்காக மாணவி காத்திருப்பதாகவும் அவரது தாயார் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி: சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை. samugammedia க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08 இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் எனவும், சில சிக்கல் நிலைகள் காரணமாக வீட்டில் இருந்து சுயகற்றல் மூலம் மாணவி பரீட்சைக்குத் தோற்றியதாக மாணவியின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், குறித்த மாணவி சதுரங்க போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும், ஆறு நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பல துறைகளில் தான் தடம் பதிக்க வேண்டும் எனவும்,  முடியுமென்றால் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்திற்காக மாணவி காத்திருப்பதாகவும் அவரது தாயார் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement