• Jul 19 2025

புல்மோட்டை மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்கு அனுமதி வழங்குங்கள்!

shanuja / Jul 18th 2025, 3:56 pm
image

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான  கட்டுவலை தொழிலுக்குரிய  அனுமதியினை வழங்க வேண்டும் என்று  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 


குச்சவெளியில் இன்று (18)இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


புடவைக்கட்டு பிரதேசத்திலுள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பொழுதும், கடலிலிருந்து கரைக்கு திரும்பும் பொழுதும் கடற்படையினரின் இறங்குதுறைக்கு சென்று படகுளை சோதனை செய்துவிட்டே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இக்கெடுபிடி காரணமாக மீனவர்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர், புடவைக்கட்டு பிரதேசத்தில் மீனவர்களின் படகுகள் சோதனை செய்யும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும்.


குச்சவெளி ஜாயா நகர் பிரதேசத்தில் பொதுவிளையாட்டு மைதானமொன்று அமைப்பது , றைகம் உப்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை கருவாட்டு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் வழங்கல், குச்சவெளி பிரதேச மீனவர்களுக்கு  சுறுக்குவலை அனுமதி வழங்கல். 


சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு  உரிய ஆவணங்களை விரைவாக வழங்கல். புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான  கட்டுவலை தொழிலுக்குரிய  அனுமதியினை வழங்குதல். 


புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில்  கடந்த அரசாங்க காலத்தில் 100 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.  இதில் தென்னிலங்கையைச் சேர்ந்த 17 பேருக்கு மாத்திரம் சம்பளம் வழங்கப்படுவதுடன் ஏனைய 83 பேருக்கும் சுமார் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படாதுள்ளது. சம்பளம் வழங்கப்படாதுள்ள 83 பேருக்கும் உடனடியாக சம்பளத்தினையும், சம்பள நிலுவையினையும் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்தார்.

புல்மோட்டை மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்கு அனுமதி வழங்குங்கள் புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான  கட்டுவலை தொழிலுக்குரிய  அனுமதியினை வழங்க வேண்டும் என்று  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். குச்சவெளியில் இன்று (18)இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புடவைக்கட்டு பிரதேசத்திலுள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பொழுதும், கடலிலிருந்து கரைக்கு திரும்பும் பொழுதும் கடற்படையினரின் இறங்குதுறைக்கு சென்று படகுளை சோதனை செய்துவிட்டே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இக்கெடுபிடி காரணமாக மீனவர்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர், புடவைக்கட்டு பிரதேசத்தில் மீனவர்களின் படகுகள் சோதனை செய்யும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும்.குச்சவெளி ஜாயா நகர் பிரதேசத்தில் பொதுவிளையாட்டு மைதானமொன்று அமைப்பது , றைகம் உப்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை கருவாட்டு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் வழங்கல், குச்சவெளி பிரதேச மீனவர்களுக்கு  சுறுக்குவலை அனுமதி வழங்கல். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு  உரிய ஆவணங்களை விரைவாக வழங்கல். புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான  கட்டுவலை தொழிலுக்குரிய  அனுமதியினை வழங்குதல். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில்  கடந்த அரசாங்க காலத்தில் 100 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.  இதில் தென்னிலங்கையைச் சேர்ந்த 17 பேருக்கு மாத்திரம் சம்பளம் வழங்கப்படுவதுடன் ஏனைய 83 பேருக்கும் சுமார் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படாதுள்ளது. சம்பளம் வழங்கப்படாதுள்ள 83 பேருக்கும் உடனடியாக சம்பளத்தினையும், சம்பள நிலுவையினையும் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement