• May 20 2024

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Chithra / Apr 2nd 2024, 2:07 pm
image

Advertisement

 

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் பிரதிவாதி ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு  நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் பிரதிவாதி ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement