• May 18 2024

பல்பொருள் அங்காடிகளில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட கழிவு

Chithra / Apr 2nd 2024, 1:37 pm
image

Advertisement

 

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவர்கள் விசேட கழிவை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்களில் பொலித்தீன் பைகளை கேஷ் கவுன்டரில் பெற்றுக் கொள்ளாத அல்லது பொருட்களை கொண்டு செல்ல மீண்டும் பயன்படுத்தக்கூடிய பையை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு கழிவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 500 ரூபாவுக்கும் அதிக தொகையை கொண்ட பில்களுக்கு 5 ரூபா கழிவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கூட்டத்தில், பல்பொருள் அங்காடிகளின் உயர் நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதாக, நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை கூறியுள்ளது.


பல்பொருள் அங்காடிகளில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட கழிவு  நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவர்கள் விசேட கழிவை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.அதன்படி இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்களில் பொலித்தீன் பைகளை கேஷ் கவுன்டரில் பெற்றுக் கொள்ளாத அல்லது பொருட்களை கொண்டு செல்ல மீண்டும் பயன்படுத்தக்கூடிய பையை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு கழிவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி 500 ரூபாவுக்கும் அதிக தொகையை கொண்ட பில்களுக்கு 5 ரூபா கழிவு வழங்கப்படவுள்ளது.இதற்காக, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கூட்டத்தில், பல்பொருள் அங்காடிகளின் உயர் நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதாக, நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement