• Oct 09 2024

காற்சட்டைப் பையில் மூன்று கோடி ரூபா தங்கம்! கட்டுநாயக்கவில் சிக்கிய இந்தியர்

Chithra / Sep 8th 2024, 10:59 am
image

Advertisement

 

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும்,

மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

காற்சட்டைப் பையில் மூன்று கோடி ரூபா தங்கம் கட்டுநாயக்கவில் சிக்கிய இந்தியர்  சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும்,மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement