• Nov 23 2024

விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய பெரிய வெள்ளி அனுஸ்டிப்பு

Chithra / Mar 29th 2024, 11:40 am
image


 

உலகெங்கும் ஜேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

அதன்படி  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருசிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய பெரிய வெள்ளி அனுஸ்டிப்பு  உலகெங்கும் ஜேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.அதன்படி  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருசிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement