• Apr 28 2024

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! samugammedia

Chithra / Jun 9th 2023, 10:26 am
image

Advertisement

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூட்டையொன்றின் விலையினை 4500 ரூபாவினால் குறைத்து 15,000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதுடன், உர நிவாரணமாக வழங்கப்படும் நிதியை அடுத்த போகம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விவசாயிகள் தமக்குத் தேவையான உரங்களை எந்தப் பிரதேசத்திலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனவும், 25000 மெட்ரிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு டெண்டர் பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர மேலும் தெரிவித்துள்ளார்.


விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி samugammedia விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூட்டையொன்றின் விலையினை 4500 ரூபாவினால் குறைத்து 15,000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதுடன், உர நிவாரணமாக வழங்கப்படும் நிதியை அடுத்த போகம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனால் விவசாயிகள் தமக்குத் தேவையான உரங்களை எந்தப் பிரதேசத்திலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனவும், 25000 மெட்ரிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு டெண்டர் பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement