• Nov 25 2024

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை..!

Chithra / Jan 6th 2024, 3:39 pm
image

 

வரி அதிகரிப்பால் சிரமத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களின் மீதான வரியை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மீதான வரிச்சுமையால் தேர்தலின் போது ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் ஏப்ரலில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த புத்தாண்டு காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சும் திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள 450 லங்கா சதொச கிளைகள் இவ்வருடம் 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 


மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை.  வரி அதிகரிப்பால் சிரமத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களின் மீதான வரியை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மீதான வரிச்சுமையால் தேர்தலின் போது ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் ஏப்ரலில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த புத்தாண்டு காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சும் திட்டமிட்டுள்ளது.தற்போதுள்ள 450 லங்கா சதொச கிளைகள் இவ்வருடம் 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement