• May 03 2024

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...! இலவசமாக ஜப்பானிற்கு செல்ல வாய்ப்பு...!samugammedia

Sharmi / Dec 4th 2023, 8:57 am
image

Advertisement

பல்கலைக்கழகங்களில் விவசாயத்துறையில் கற்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் தொழில் பயிற்சியை வழங்க ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணங்கியுள்ளதாக  கொழும்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை விவசாயத்திற்கு மாத்திரமன்றி பெருந்தோட்ட பயிர்களை கற்கும் மாணவர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன்  தொழில் பயிற்சியின் போது மாதாந்த உதவித்தொகையாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 960 யென் அல்லது 3 இலட்சத்து 28 ஆயிரத்து 341 இலங்கை ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த ஒரு வருட கால பயிற்சியின் போது ஊதியம், உணவு மற்றும் தங்கும் வசதிகள் மற்றும் விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பானிய மொழியில் மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதாகவும், ஜப்பானிய பண்ணைகளில் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இலவசமாக ஜப்பானிற்கு செல்ல வாய்ப்பு.samugammedia பல்கலைக்கழகங்களில் விவசாயத்துறையில் கற்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் தொழில் பயிற்சியை வழங்க ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணங்கியுள்ளதாக  கொழும்பு செய்திகள் தெரிவித்துள்ளன.அதேவேளை விவசாயத்திற்கு மாத்திரமன்றி பெருந்தோட்ட பயிர்களை கற்கும் மாணவர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன்  தொழில் பயிற்சியின் போது மாதாந்த உதவித்தொகையாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 960 யென் அல்லது 3 இலட்சத்து 28 ஆயிரத்து 341 இலங்கை ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறித்த ஒரு வருட கால பயிற்சியின் போது ஊதியம், உணவு மற்றும் தங்கும் வசதிகள் மற்றும் விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், ஜப்பானிய மொழியில் மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதாகவும், ஜப்பானிய பண்ணைகளில் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement