• May 17 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!samugammedia

Sharmi / Apr 7th 2023, 10:41 pm
image

Advertisement

எதிர்க்கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்களால் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசாங்கம் சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர, அதனை நிறைவேற்றும் முயற்சிகளை கைவிடவில்லை என  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு பல்வேறு தரப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமையால் அரசாங்கம் அதனை சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர, அதனை நிறைவேற்றும் முயற்சியைக் கைவிடவில்லை.

அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்வதே இதன் நோக்கமாகும். இதன் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகளாகவே அடையாளப்படுத்தப்படுவர்.

உண்மையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதெனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாறாக நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்ற அஜித் நிவாட் கப்ரால் போன்றவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக, அவர்களுக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டுsamugammedia எதிர்க்கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்களால் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசாங்கம் சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர, அதனை நிறைவேற்றும் முயற்சிகளை கைவிடவில்லை என  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு பல்வேறு தரப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமையால் அரசாங்கம் அதனை சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர, அதனை நிறைவேற்றும் முயற்சியைக் கைவிடவில்லை.அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்வதே இதன் நோக்கமாகும். இதன் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகளாகவே அடையாளப்படுத்தப்படுவர்.உண்மையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதெனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.மாறாக நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்ற அஜித் நிவாட் கப்ரால் போன்றவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக, அவர்களுக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement