• Dec 14 2024

அம்பாறையில் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதம்..!

Sharmi / Nov 28th 2024, 8:59 am
image

கிழக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள்  முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கிழக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கன மழையினால் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் அரச காரியாலயங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 அலுவலகங்கள் உள்ளேயும் வெளியேயும் நீர் தேங்கி நிற்பதால்  உத்தியோகஸ்தர்கள் உட்செல்ல முடியாமல் உள்ளது.

கல்முனையில் இயங்கும்  இலங்கை போக்குவரத்துச் சபை முற்றாக நீரில் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு  பிரதேச காரியாலயமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை, முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

 கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் மாவட்ட அலுவலகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை வங்கி காரியாலயம், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




 

அம்பாறையில் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதம். கிழக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள்  முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.கிழக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கன மழையினால் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் அரச காரியாலயங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  அலுவலகங்கள் உள்ளேயும் வெளியேயும் நீர் தேங்கி நிற்பதால்  உத்தியோகஸ்தர்கள் உட்செல்ல முடியாமல் உள்ளது.கல்முனையில் இயங்கும்  இலங்கை போக்குவரத்துச் சபை முற்றாக நீரில் பாதிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு  பிரதேச காரியாலயமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை, முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் மாவட்ட அலுவலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை வங்கி காரியாலயம், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement