• Jun 26 2024

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்...! மட்டு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள்...!

Sharmi / Jun 17th 2024, 10:54 am
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று(16) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன்,செயலாளர் கு.அனுசன்,பொருளாளர் ரி.கிருஷாந்த்,சங்கத்தின் அமைப்பாளர் மொஹமட் அஷீம் ஆகியோர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.

‘நாங்கள் எமது வேலைவாய்ப்பு உரிமையினையே எதிர்பார்க்கின்றோம்.அதனை நாங்கள் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு எங்களை தள்ளவேண்டாம்.இன்று வேலையற்ற நிலையில் நாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்துவிட்டு வீடுகளில் இருப்பதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்,கொரனா உட்பட பல்வேறு காரணங்களினால் தமது பட்டக்கல்வியை காலம் தாழ்த்து பூர்த்திசெய்த மாணவர்களும் இன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எங்களது நிலைமைகளை கருத்தில்கொண்டு எமக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் உhயி அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.போராட்டங்கள் ஊடாகத்தான் எங்கள் கோரிக்கையினை நிறைவேற்ற நாங்கள் விரும்பவில்லை.

எங்களை அந்த நிலைமைக்குள் தள்ளிவிடாமல் விரைவாக எமக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.எதிர்காலத்தில் எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கே எமது ஆதரவுகள் இருக்கும்.இன்றைய அரசு எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துமானால் அவர்களுக்கான ஆதரவு இருக்கும்.

பெண்கள் பெரும் கஸ்டத்திற்கு மத்தியிலேயே தமது தமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்த நிலையிலும் வேலைவாய்ப்புகள் பெறமுடியாத நிலையில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தனியார் வேலைவாய்ப்பினை தேடிச்சென்றால் பட்டபடிப்பனை பூர்த்திசெய்த காரணத்தியால் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு முன்வராத நிலையே காணப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். மட்டு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று(16) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன்,செயலாளர் கு.அனுசன்,பொருளாளர் ரி.கிருஷாந்த்,சங்கத்தின் அமைப்பாளர் மொஹமட் அஷீம் ஆகியோர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.‘நாங்கள் எமது வேலைவாய்ப்பு உரிமையினையே எதிர்பார்க்கின்றோம்.அதனை நாங்கள் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு எங்களை தள்ளவேண்டாம்.இன்று வேலையற்ற நிலையில் நாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்துவிட்டு வீடுகளில் இருப்பதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.ஈஸ்டர் தாக்குதல்,கொரனா உட்பட பல்வேறு காரணங்களினால் தமது பட்டக்கல்வியை காலம் தாழ்த்து பூர்த்திசெய்த மாணவர்களும் இன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எங்களது நிலைமைகளை கருத்தில்கொண்டு எமக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் உhயி அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.போராட்டங்கள் ஊடாகத்தான் எங்கள் கோரிக்கையினை நிறைவேற்ற நாங்கள் விரும்பவில்லை.எங்களை அந்த நிலைமைக்குள் தள்ளிவிடாமல் விரைவாக எமக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.எதிர்காலத்தில் எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கே எமது ஆதரவுகள் இருக்கும்.இன்றைய அரசு எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துமானால் அவர்களுக்கான ஆதரவு இருக்கும்.பெண்கள் பெரும் கஸ்டத்திற்கு மத்தியிலேயே தமது தமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்த நிலையிலும் வேலைவாய்ப்புகள் பெறமுடியாத நிலையில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தனியார் வேலைவாய்ப்பினை தேடிச்சென்றால் பட்டபடிப்பனை பூர்த்திசெய்த காரணத்தியால் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு முன்வராத நிலையே காணப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement