• Apr 27 2024

இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை

Chithra / Jan 28th 2023, 3:58 pm
image

Advertisement

2023ம் ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (சிப்) சேர்க்கப்படும் என்றும், இந்த முறையை உலகின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியதாக மவ்பிம செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை 2023ம் ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (சிப்) சேர்க்கப்படும் என்றும், இந்த முறையை உலகின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியதாக மவ்பிம செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement