முன்னாள் அமைச்சர்களின் அரச இல்லங்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டது.
இதனடிப்படையில், குறித்த குழுவால் தற்போது அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர்களின் அரச இல்லங்கள் தொடர்பில் அரசின் முடிவு - வெளியான அறிக்கை முன்னாள் அமைச்சர்களின் அரச இல்லங்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.அந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டது.இதனடிப்படையில், குறித்த குழுவால் தற்போது அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.அண்மையில், அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.