• Mar 26 2025

மகளின் போக்குவரத்துக்கு அரச வாகனம்; விசாரணையில் சிக்கிய முன்னாள் பிரதானி

Chithra / Mar 25th 2025, 12:31 pm
image


பாராளுமன்ற முன்னாள் பிரதானி ஒருவர் தனது மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை சில காலமாக பயன்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தின் வாகனம் ஒன்று அம்பாறை பிரதேசத்திற்கு அடிக்கடி வருகை தந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் இந்த பிரதானி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாகவும், தனது வாகனங்களுக்கு வரம்பற்ற எரிபொருளை பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணை குழுக்களுக்கு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள், பிரதிக் குழுத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், வாகனங்கள் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்திய விதம் தொடர்பில் ஆராய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மகளின் போக்குவரத்துக்கு அரச வாகனம்; விசாரணையில் சிக்கிய முன்னாள் பிரதானி பாராளுமன்ற முன்னாள் பிரதானி ஒருவர் தனது மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை சில காலமாக பயன்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பாராளுமன்றத்தின் வாகனம் ஒன்று அம்பாறை பிரதேசத்திற்கு அடிக்கடி வருகை தந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.கடந்த பத்து வருடங்களில் இந்த பிரதானி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாகவும், தனது வாகனங்களுக்கு வரம்பற்ற எரிபொருளை பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணை குழுக்களுக்கு தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள், பிரதிக் குழுத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், வாகனங்கள் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்திய விதம் தொடர்பில் ஆராய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement