• Mar 26 2025

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? அநுர அரசின் விசேட திட்டம்

Chithra / Mar 25th 2025, 12:37 pm
image


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த பிரதி அமைச்சர்,

நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். 

இது பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது. 

ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.


நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா அநுர அரசின் விசேட திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் இதனை தெரிவித்தார்.அங்கு மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த பிரதி அமைச்சர்,நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இது பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது. ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement