• Mar 26 2025

தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கைவரும் இந்திய குழுவினர்!

Chithra / Mar 25th 2025, 12:41 pm
image


இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (25) திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கி விமானத்தில் வர திட்டமிடப்பட்டுள்ளது.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஆய்வு செய்யவும்,

இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரவும் இந்தக் குழு திட்டமிட்டது.

திட்டமிட்டக் கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி தமிழகம் திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கைவரும் இந்திய குழுவினர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (25) திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கி விமானத்தில் வர திட்டமிடப்பட்டுள்ளது.மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஆய்வு செய்யவும்,இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரவும் இந்தக் குழு திட்டமிட்டது.திட்டமிட்டக் கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி தமிழகம் திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement