• Jun 26 2024

தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் அரசின் தீர்மானம்

Chithra / Jun 17th 2024, 8:33 am
image

Advertisement

 

2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், பத்து சதவீத பொருளாதாரம் சுருங்கியிருந்த நிலையில், தற்போது 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் உள்ளது.

அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதினையும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

நாட்டில் சுதந்திர சந்தைக்குத் தேவையான சூழலை உருவாக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது தவணை சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டது.

இலங்கையை உடைக்க முடியாத பொருளாதாரமாக மாற்றி, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்திற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் அரசின் தீர்மானம்  2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.அனுராதபுரத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், பத்து சதவீத பொருளாதாரம் சுருங்கியிருந்த நிலையில், தற்போது 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் உள்ளது.அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதினையும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.நாட்டில் சுதந்திர சந்தைக்குத் தேவையான சூழலை உருவாக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது தவணை சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டது.இலங்கையை உடைக்க முடியாத பொருளாதாரமாக மாற்றி, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்திற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement