• May 20 2024

ஜனநாயகத்தின் மீது அரசாங்கம் நடத்திய முதலாவது துப்பாக்கிச் சூடு-திலங்க சுமதிபால கருத்து! SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 2:15 pm
image

Advertisement

ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதலாவது துப்பாக்கிச் சூடு என்பது தேர்தலை அறிவித்த பின்னர் தபால் மூல வாக்களிப்பை பிற்போடும் செயற்பாடு என என சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்தலை பிற்போடுவதனால் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ நடத்தப்படாது என சுதந்திர மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் தேர்தலுக்கு பணமில்லை என்று கூறினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருடன் இருக்கும் வரை தேர்தலே கிடையாது என சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பத்திரங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கான தேர்தல் பத்திரங்கள் பல மாவட்டங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது அரசாங்கம் நடத்திய முதலாவது துப்பாக்கிச் சூடு-திலங்க சுமதிபால கருத்து SamugamMedia ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதலாவது துப்பாக்கிச் சூடு என்பது தேர்தலை அறிவித்த பின்னர் தபால் மூல வாக்களிப்பை பிற்போடும் செயற்பாடு என என சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.இவ்வாறு தேர்தலை பிற்போடுவதனால் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ நடத்தப்படாது என சுதந்திர மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.தேர்தலை நடத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் தேர்தலுக்கு பணமில்லை என்று கூறினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருடன் இருக்கும் வரை தேர்தலே கிடையாது என சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பத்திரங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கான தேர்தல் பத்திரங்கள் பல மாவட்டங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement