நாட்டில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்கான, புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உலக அறிவைப் பெறுவதற்கு இலங்கை பிள்ளைகளை தயார்படுத்துவதோடு, ஆன்ம சக்தியுடன் கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கல்வியின் நோக்கத்தை பரந்த அளவில் நாம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கல்வியின் ஒரே நோக்கம் வேலை சந்தைக்கு தயார்படுத்துவது மட்டுமல்ல.
பலர் பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஒரு வேலைக்கு பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் கல்வியை வேலை சந்தைக்கு வழங்கும் நபரைப் பற்றி மட்டும் சிந்தித்து உருவாக்க வேண்டியதில்லை, சமூகத்திற்கு எப்படிப்பட்ட ஒரு நபர் தேவை என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
தன்னம்பிக்கை உள்ள, அந்த நம்பிக்கையுடன் சமூகத்திற்கு சென்று அறிவைத் தேடி, அறிவைப் பெறக்கூடிய ஒரு நபரைத்தான் நமது கல்வி முறையின் மூலம் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு நபர் வெளியே சென்று 'யாராவது எனக்கு வேலை தருவார்களா' என்று காத்திருக்க மாட்டார்.
அந்த வேலை வாய்ப்பையும் பொருளாதாரத்தில் பங்கேற்கும் விதத்தையும் உருவாக்கக்கூடிய ஒரு நபரைத்தான் நாம் உருவாக்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அரசாங்கத்தின் திட்டம் பிரதமரின் அறிவிப்பு நாட்டில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்கான, புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.உலக அறிவைப் பெறுவதற்கு இலங்கை பிள்ளைகளை தயார்படுத்துவதோடு, ஆன்ம சக்தியுடன் கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.கல்வியின் நோக்கத்தை பரந்த அளவில் நாம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கல்வியின் ஒரே நோக்கம் வேலை சந்தைக்கு தயார்படுத்துவது மட்டுமல்ல.பலர் பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஒரு வேலைக்கு பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் கல்வியை வேலை சந்தைக்கு வழங்கும் நபரைப் பற்றி மட்டும் சிந்தித்து உருவாக்க வேண்டியதில்லை, சமூகத்திற்கு எப்படிப்பட்ட ஒரு நபர் தேவை என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.தன்னம்பிக்கை உள்ள, அந்த நம்பிக்கையுடன் சமூகத்திற்கு சென்று அறிவைத் தேடி, அறிவைப் பெறக்கூடிய ஒரு நபரைத்தான் நமது கல்வி முறையின் மூலம் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு நபர் வெளியே சென்று 'யாராவது எனக்கு வேலை தருவார்களா' என்று காத்திருக்க மாட்டார்.அந்த வேலை வாய்ப்பையும் பொருளாதாரத்தில் பங்கேற்கும் விதத்தையும் உருவாக்கக்கூடிய ஒரு நபரைத்தான் நாம் உருவாக்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.